தொழில்நுட்பம்

அதிரடி சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்

Published On 2019-05-15 08:06 GMT   |   Update On 2019-05-15 08:06 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் அதிரடி சிறப்பம்சங்களுடன் தனது புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சென் மோட் ஆக்டிவேட் செய்தால் அவசர அழைப்புகள் மற்றும் கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும். மற்ற நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. இந்த அம்சம் 20 நிமிடங்களுக்கு இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.



பின்புறம் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், f/1.6, OIS மற்றும் EIS வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 78 எம்.எம். 8 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 1μm பிக்சல் OIS 3X லாஸ்-லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2 வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் வாட்டர் ரெசி்ஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் IP சான்று எதுவும் கொண்டிருக்கவில்லை. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.



ஒன்பிளஸ் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + 19.5:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜ்

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெபுளா புளு, மிரர் கிரே மற்றும் ஆல்மண்ட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.48,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.52,999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.57,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகை

- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக்
- ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.9,300 மதிப்புள்ள பலன்கள்
- சர்விஃபை வழங்கும் 70 சதவிகித பைபேக் சலுகை
- ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை சலுகை
Tags:    

Similar News