தொழில்நுட்பம்

70 நாட்களில் இத்தனை ஸ்மார்ட்போன்களா? விற்பனையில் கலக்கும் சாம்சங்

Published On 2019-05-15 06:59 GMT   |   Update On 2019-05-15 07:51 GMT
சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிவித்து இருக்கிறது.



சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிக கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் 100 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி) மதிப்பிலான வியாபாரம் செய்திருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி டாலர்கள் இலக்கை எட்ட முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களில் இருந்து மட்டும் ரூ.28,000 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாக சாம்சங் பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது.



“தற்சமயம் கேலக்ஸி ஏ சீரிசில் மொத்தம் ஆறு மாடல்களை விற்பனை செய்கிறோம். இவற்றுக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைக்கிறது. கேலக்ஸி ஏ2 கோர் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனையாகிறது. 70 நாட்களில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறோம்,” என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் மற்றும் மூத்த விளம்பர அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை பிடிக்க சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மற்றும் சாம்சங் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து கேலக்ஸி ஏ சீரிசில் ஒவ்வொரு மாதமும் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் வரும் வாரங்களில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News