தொழில்நுட்பம்

கேட்பாரற்றுக் கிடந்த இந்தியர் விவரங்கள் - சத்தமில்லாமல் அபேஸ் செய்த ஹேக்கர்கள்

Published On 2019-05-12 06:38 GMT   |   Update On 2019-05-12 06:38 GMT
ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.



ஆன்லைனில் சுமார் 27.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததால் அவற்றை ஹேக்கர்கள் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்களின் மாங்கோ டி.பி. (MongoDB) டேட்டாபேஸ் அமேசான் AWS ஷோடன் சர்வெர்களில் பொதுப்படையாக இயக்கக்கூடிய வகையில் இருந்ததாக பாப் டியாசென்கோ எனும் பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்தார்.

பொதுப்படையில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட மாங்கோ டி.பி. டேட்டாபேசில் சுமார் 27,52,65,298 பேரின் தனிப்பட்ட விவரங்களுடன் மே 1 ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பாதுகாக்கப்படாமல் இருந்தது என பாப் தெரிவித்திருக்கிறார். 



இந்த விவரங்களில் பயனரின் பெயர், மின்னஞ்சல், பாலினம், கல்வி விவரம், பணி விவரங்கள், மொபைல் போன் நம்பர், வேலை செய்யும் இடம், பிறந்த தேதி, வருமானம் உள்ளிட்டவை ஷோடனில் இயக்கக்கூடிய வகையில் கிடந்திருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி முதன்முதலில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட விவரங்களில் அதிகளவு கேச்சி இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்ததும் பாப், இந்திய செர்ட் குழுவினருக்கு மே 1 ஆம் தேதி தகவல் வழங்கி இருக்கிறார். இது மே 8 ஆம் தேதி வரை அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பின் யுனிஸ்டெலார் எனும் ஹேக்கர்கள் குழு பயனர் விவரங்களை அபகரித்துக் கொண்டு கோடெட் குறுஞ்செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றது.

வெளிப்படையாக கிடைத்த விவரங்களை விட குறைந்தளவு விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கலாம் என்ற போதும், இந்திய பகுதியில் இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என பாப் தெரிவித்தார். முன்னதாக முறையற்ற ஆத்தென்டிகேஷன் மூலம் மாங்கோ டி.பி. சர்வெர்களில் மால்வேர் மற்றும் ரான்சம்வேர் போன்றவை இன்ஸ்டால் ஆகியிருக்கின்றன என அவர் தெரிவித்திருந்தார்.
Tags:    

Similar News