தொழில்நுட்பம்

டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி உலகளவில் இரண்டாம் இடம்பிடித்தார் மோடி

Published On 2019-05-08 04:37 GMT   |   Update On 2019-05-08 04:37 GMT
இந்திய பி்ரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி உலகளவில் இரண்டாம் பிடித்திருக்கிறார். #NarendraModi




இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நரேந்திர மோடியை சுமார் 110,912,648 பேர் பின்பற்றுகின்றனர் என செம்ரஷ் (SEMrush) எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார். சமூக வலைதளங்களில் பராக் ஒபாமாவை சுமார் 182,710,777 பேர் பின்பற்றுகின்றனர். உலகம் முழுக்க சுமார் 11 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலகளவில் சுமார் 9.6 கோடி பேர் பின்பற்றுகின்றனர். எனினும், ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவர்களில் டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சமூக வலைதளங்களில் நரேந்திர மோடி பிரபலமாவதை எடுத்துரைக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் சுமார் 1.2 கோடி பேர் பின்பற்றுகின்றனர். 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ட்விட்டர் அதிகளவு அரசியல் பிரியர்களை கொண்டிருக்கிறது என்றும் செம்ரஷ் தெரிவித்திருக்கிறது.
Tags:    

Similar News