தொழில்நுட்பம்

குறைந்த விலையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Published On 2019-05-08 01:16 GMT   |   Update On 2019-05-08 02:32 GMT
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google



கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுளின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன. 

இத்துடன் இவை முறையே 3000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.



கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL சிறப்பம்சங்கள்:

- பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR
- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
- பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR
- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 615 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm, ƒ/1.8,  76° FOV, OIS, EIS
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84° FOV,  1.12μm
- கைரேகை சென்சார்
- ஆக்டிவ் எட்ஜ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 

புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News