தொழில்நுட்பம்

இந்தியாவில் ரூ.4,000 விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2019-05-04 05:43 GMT   |   Update On 2019-05-04 05:43 GMT
இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. #OPPO



ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மற்றும் 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் ரூ.7,990 விலையில் கிடைக்கிறது.

முன்னதாக ஒப்போ ஏ3எஸ் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,990 விலையிலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமசம் விலை குறைப்புக்கு பின் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,990 என மாற்றப்பட்டுள்ளது. 



சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. பியூடிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News