தொழில்நுட்பம்

இந்தியாவில் அந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது - டிம் குக் பெருமிதம்

Published On 2019-05-02 04:38 GMT   |   Update On 2019-05-02 04:38 GMT
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். #Apple



இந்தியாவில் ஐபோன் விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும் போது, “ஐபோன் XR விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது எங்களுக்கு உதவியாக இருக்கும்,” 

“இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும். குறுகிய காலத்திற்கு இந்த சந்தை சவால் மிக்கதாக இருக்கிறது. எனினும், இந்த காலக்கட்டத்தில் நாங்கள் அதிகம் கற்றுக் கொள்கிறோம். இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கிருக்கிறோம். இதன் மூலம் இங்கு சிறப்பான வியாபாரம் செய்ய முடியும். மேலும் இங்கு எங்களது வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.”



இதுதவிர, “இந்தியாவில் சில்லறை விற்பனை மையங்களை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். இது தொடர்பான அனுமதி பெற அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறோம். இத்துடன் டெவலப்பர், அக்செல்லரேட்டர் ஒன்றை திறந்திருக்கிறோம். இது நீண்ட நேர திட்டம் ஆகும். இது மூலம் கிடைக்கும் வளர்ச்சி அபாரமானதாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக 2019 ஆண்டின் இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் 5800 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 சதவிகிதம் சரிவாகும். வருடாந்திர அடிப்படையில் இது 15.94 சதவிகிதம் குறைவு ஆகும்.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் 5250 கோடி டாலர்கள் முதல் 5450 கோடி டாலர்கள் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இதில் நிர்வாக செலவீனம் 870 கோடி டாலர்கள் முதல் 880 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News