தொழில்நுட்பம்

தனியுரிமை விதிமீறல் - புதிய பிரச்சனையில் ஃபேஸ்புக்

Published On 2019-04-27 10:17 GMT   |   Update On 2019-04-27 10:17 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook



கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்கானிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கு எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை. என கூறப்பட்டுள்ளது.



"ஃபேஸ்புக் கையாளும் அதிகப்படியான பயனர் விவரங்களை பாதுகாப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தாது தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தனியுரிமை கட்டமைப்பு காலியாகவே இருக்கிறது. அதன் விதிகள் தனியுரிமை பாதுகாப்பிற்கு அர்த்தமற்றதாக மாற்றுகிறது." என கனடாவுக்கான தனியுரிமை ஆணையர் டேனியல் தெரியன் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை நிராகரித்து விட்டதாகவும், கனடா நாட்டு விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க தனக்கு அதிகாரம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதுபற்றி ஃபேஸ்புக் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News