தொழில்நுட்பம்

இந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்

Published On 2019-04-25 08:05 GMT   |   Update On 2019-04-25 08:05 GMT
இந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter



ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க மேலும் ஓர் புதிய வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தியா முழுக்க நடைபெறும் பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள் வாக்களிப்பது பற்றி தவறாக உள்ளது (It’s misleading about voting) என்றும் ரிபோர்ட் ட்விட் “Report Tweet” என அழைக்கப்படுகிறது. 

ட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை பயனர்கள் உரையாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.



இந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இதர நாடுகளிலும் இந்த அம்சம் தேர்தல் சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

வாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டர் பயனர்கள் பதிவிட முடியாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. வாக்களிப்பது பற்றி எவ்வித தகவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரஙகளை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது ஆகும்.

புதிய அம்சங்கள் ட்விட்டர் டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய விவரம் ஏற்கனவே ட்விட்டர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுல்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News