தொழில்நுட்பம்

மார்ச் 25 இல் புதிய அறிவிப்புக்கு தயாராகும் ஆப்பிள்

Published On 2019-03-12 05:52 GMT   |   Update On 2019-03-12 05:52 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Apple



ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் சார்பில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி மார்ச் 25 ஆம் தேதி இட்ஸ் ஷோ டைம் (It’s show time) என்ற பெயரில் ஆப்பிள் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது.

ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் புதிய வன்பொருள் சாதனங்கள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக செய்தி மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஸ்டுடியோக்கள் மற்றும் நெட்வொர்க்களுக்கு ஏப்ரல் மாத வெளியீட்டிற்கு தயாராக இருக்க தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சேவை முழுமையாக துவங்க மேலும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் நெக்ஸ்ட் இஷூ மீடியாவின் டிஜிட்டல் இதழ் சேவையான டெக்ஸ்ச்சரை கடந்த ஆண்டு கைப்பற்றியது.

இதனால் ஆப்பிளின் செய்தி சேவை, இதழ் சேவையான டெக்ஸ்ச்சர் ஆப்பிள் நியூஸ் சேவையுடன் ஒன்றிணைக்கப்படும் என தெரிகிறது. பிரத்யேக சந்தா சேவையின் மூலம் பல்வேறு பதிப்பகங்களை ஒன்றிணைத்து, ஆப்பிள் மியூசிக் போன்று புதிய சேவையை கொண்டு ஆப்பிள் தனது வருவாயினை அதிகரித்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. 

மார்ச் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆப்பிள் விழா ஆப்பிள் பார்க் வளகாத்தினுள் அமைந்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழா ஆப்பிள் டி.வி. மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News