தொழில்நுட்பம்

ஜியோ, வோடபோன் போன்றே ஏர்டெல் வழங்கும் சேவை

Published On 2019-03-02 09:35 GMT   |   Update On 2019-03-02 09:35 GMT
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் வோல்ட்இ நிறுவனமும் வோல்ட்இ சேவையில் தேசிய ரோமிங் வழங்குகிறது. #AirtelVoLTE



ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வோல்ட்இ தொழில்நுட்பத்தில் தேசிய ரோமிங் சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பாரதி ஏர்டெல் தற்சமயம் இந்த சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் வோல்ட்இ சேவை தற்சமயம் தேசிய ரோமிங்கின் போதும் வேலை செய்யும் என டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகளை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து தற்சமயம் நாடு முழுக்க சுமார் 21 டெலிகாம் வட்டாரங்களில் தேசிய ரோமிங் வசதியில்லாமல் வழங்க துவங்கியது. 

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது பங்கு மற்றும் பத்திர விற்பனை மூலம் ரூ.32,000 கோடி நிதி திரட்ட நிர்வாக குழு இயக்குனர்கள் ஒப்புதல் வழங்கியிருப்பதாக அறிவித்தது.



வோடபோன் நிறுவனம் சமீபத்தில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. புதிய ரூ.129 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.129 பிரீபெயிட் சலுகை குஜராத், சென்னை மற்றும் இதர முக்கிய வட்டாரங்களில் கிடைக்கிறது. வோடபோன் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோவின் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News