தொழில்நுட்பம்

ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்

Published On 2019-02-15 08:11 GMT   |   Update On 2019-02-15 08:11 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm



ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை ஜெர்மனியில் மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இம்முறை ஐபோன்கள் குவால்காம் சிப்களை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறது. 

முன்னதாக குவாலகாம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு ஜெர்மனியின் 15 சில்லறை விற்பனையகங்களில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் காப்புரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், குவால்காம் நிறுவனம் மொபைல் போன்களை வயர்லெஸ் டேட்டா நெட்வொர்க்களுடன் இணைக்கும் மோடெம் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமைகளை மீறியிருப்பதாக ஆப்பிள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 



எனினும், ஆப்பிள் நிறுவனமும் காப்புரிமைகளை மீறியதாக குவால்காம் தெரிவித்து வருகிறது. இருநிறுவனங்கள் சார்ந்த முக்கிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரயிருக்கிறது.  

2016 ஆம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் குவால்காம் சிப்செட்களை வழங்கிவந்தது. பின் 2016 ஆம் ஆண்டுக்கு பின் குவால்காம் சிப்களை தவிரித்து, ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம் சிப்களை வழங்க துவங்கியது. கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த சாதனங்களில் அந்நிறுவனம் இன்டெல் சிப்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தது. 

இந்த சூழலிலும் ஆப்பிள் தனது பழைய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களில் மட்டும் தொடர்ந்து குவால்காம் சிப்களை பயன்படுத்தி வருகிறது. இன்டெல் சிப்களை கொண்டிருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஜெர்மனியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News