தொழில்நுட்பம்

இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு பெறும் நகரம்

Published On 2019-01-24 04:26 GMT   |   Update On 2019-01-24 04:26 GMT
இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

 

இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது. 



இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. 



"இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
Tags:    

Similar News