தொழில்நுட்பம்

தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

Published On 2019-01-17 07:34 GMT   |   Update On 2019-01-17 07:34 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.399 சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் படி மாற்றப்பட்டுள்ளது. #BSNL



பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்களுக்கு மொத்தம் 237.54 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல். நிறுவன வலைதளங்களின் வெவ்வேறு வட்டாரங்களில் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1 ஜி.பி. டேட்டாவை விட 2.21 ஜி.பி. வரை அதிகம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 3.21 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.



கூடுதல் டேட்டா தவிர ரூ.399 பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை கடந்த ஆண்டு ராக்கி பண்டிகைக்கு அறிவித்தது. பிரீபெயிட் பயனர்களுக்கு 2.21 ஜி.பி. கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News