தொழில்நுட்பம்

96.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை

Published On 2019-01-14 08:33 GMT   |   Update On 2019-01-14 08:33 GMT
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 96.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone #offers



ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

69 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.396 விலையில் 96.6 ஜி.பி. டேட்டா பெற முடியும். இச்சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும், பயனர்களுக்கு அதிவேக டவுன்லோடுகளுக்கு ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும்.

டேட்டா தவிர புதிய வோடபோன் சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இத்துடன் தேசிய ரோமிங் சேவையும் வழங்கப்படுகிறது.



முதற்கட்டமாக ரூ.396 சலுகை டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோன்ற பலன்களை வழங்கும் மற்றொரு சலுகை கொல்கத்தாவில் ரூ.398 விலையில் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் வோடபோன் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்து வேலிடிட்டியை 84 நாட்களாக அதிகரித்தது. எனினும், தினசரி டேட்டா அளவு 1.4 ஜி.பி.யில் இருந்து 1 ஜி.பி.யாக குறைக்கப்பட்டது. இதே சலுகையில் தினமும் 100 உள்ளூர், வெளியூர் எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. 

ஆண்டு சலுகையை பொருத்தவரை வோடபோன் ரூ.1499 சலுகை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இச்சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜி.பி. அதிவேக டேட்டா மற்றும், அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News