தொழில்நுட்பம்

தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Published On 2019-01-11 05:01 GMT   |   Update On 2019-01-11 05:01 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை தற்காலிகமாக குறைத்திருக்கிறது. #Nokia #flipkartoffers



ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்கப்படுகிறது.

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து தள்ளுபடி பெறுவதோடு, ப்ளிப்கார்ட் சார்பில் பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது.

நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் வெளியிடப்பட்டது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் வெளியிடப்பட்டது.



இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருப்பதுடன், வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முன்னதாக நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News