தொழில்நுட்பம்

சென்னையில் ஐபோன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி

Published On 2018-12-25 06:27 GMT   |   Update On 2018-12-25 06:27 GMT
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி ஆலையில், ஐபோன்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதியளித்திருக்கிறது. #iPhone



தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது.

15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஃபாக்ஸ்கான் ஆலையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக தமிழக அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் தயாரிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நிறுவன வளாகத்தில் ஏற்கனவே இதற்கென தனி ஆலை உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு தட்டுப்பாடுக்கு ஏற்ப புதிய ஐபோன் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.



அடுத்த ஆண்டு முதல் புதிய ஐபோன்களின் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கப்படுகிறது. ஐபோன்கள் விலை உயர்ந்த சாதனம் என்பதால் இவை சென்னையில் தயாரிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக  கூறும் போது, ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தனது தொழிலை மேலும் விருத்தி செய்யும் வகையிலும் இங்கிருந்து வெளிமாநிலத்துக்கு சென்று விடாமல் தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
Tags:    

Similar News