தொழில்நுட்பம்

செப்டம்பரில் மட்டும் 1.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ

Published On 2018-11-29 10:16 GMT   |   Update On 2018-11-29 10:16 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. #RelianceJio



இந்தியாவில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் 119.14 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து வாடிக்கையாளர்களை அதிகளவு பெற்று வருவது தெரியவந்துள்ளது.

செப்டம்பரில் மட்டும் சுமார் 1.32 கோடி புது வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 5.44 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. ஜியோ தவிர மற்ற நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை பெருமளவு வாடிக்கயைாளர்களை இழந்துள்ளன.

புதிய மொபைல் போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஆகஸ்டு மாத இறுதியில் 118.9 கோடியில் இருந்து, செப்டம்பரில் 119.1 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது மாதாந்திர அடிப்படையில் பார்க்கும் போது 0.20 சதவிகித வளர்ச்சியாகும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ மாதம் 1.3 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து அதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்சமயம் 25.22 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் 21.57 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் 29.38 சதவிகித பங்குகளுடன் முன்னிலையில் இருந்த நிலையில், 23 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோன்று ஐடியா செல்லுலார் நிறுவனம் சுமார் 40 லட்சம் (தற்போதைய மொத்த வாடிக்கையாளர்கள் 21.31 கோடி) வாடிக்கையாளர்களையும், வோடபோன் 26 லட்சம் (தற்போதைய மொத்த வாடிக்கையாளர்கள் 22.18 கோடி) வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் சுமார் 11.3 கோடி வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 9.67 சதவிகித பங்குகளை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சேவையை நிறுத்திக் கொண்ட ஆர் காம் செப்டம்பரில் 16,349 வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
Tags:    

Similar News