தொழில்நுட்பம்

ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்

Published On 2018-11-20 04:50 GMT   |   Update On 2018-11-20 04:50 GMT
ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் செயலியில் புது அம்சத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதே அம்சத்தை சுமார் 18.8 கோடி ஸ்னாப்சாட் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ஏ.ஆர். செல்ஃபி மாஸ்க், அனிமேஷன் ஜிஃப், பிட்மோஜி போன்ற வசதிகள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர இந்த ஆண்டின் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஸ்னாப்சாட் பயனர்கல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இருக்கிறது. எனினும், ஸ்னாப்சாட் செயலியில் தானாக மறைந்துபோகும் சாட் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை நிரந்தரமாக பதிவிடும் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது.



வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதும், அவற்றை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வேலை செய்யும். இன்ஸ்டாகிராம் செயலியில், நிரந்தரமாகவும், குறைந்த நேரத்திற்கு என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும். டெக்ஸ்ட் பதிவுகள் நிரந்தரமானவை ஆகும்.

இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் மிக எளிமையாக தனது செயலியில் வழங்க இருக்கிறது. இதற்கு பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது தானாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மறைந்துபோகச் செய்ய டைமர் வசதியை சேர்க்க முடியும். வாட்ஸ்அப் செயலியில் தானாக அழிந்து போகும் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் எழுத்துக்கள் தானாக அழிந்து போகச் செய்யவோ அல்லது எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை மிக எளிமையாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த அம்சம் வழங்கலாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News