ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.398 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Airtel #Offers
105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை
பதிவு: நவம்பர் 08, 2018 15:31
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை அடிக்கடி மாற்றியும், புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.398 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ரூ.398 மற்றும் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.398 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர், தேசிய அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1.5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 105 ஜி.பி. டேட்டா கிடைக்கிறது.
இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஏர்டெல் சலுகை இந்தியா முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ரூ.399 விலையில் ஏர்டெல் மற்றொரு சலுகையை வழங்கி வருகிறது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் சில பயனர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டியும், மற்றொரு சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வேலிடிட்டி தவிர இந்த சலுகையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.398 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோன்று வோடபோன் வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
வோடபோன் வழங்கும் சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டப்பாடு அறிவிக்கப்பட்டுள்து. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சலுகைகளில் வாய்ஸ் கால் மேற்கொள்ள எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.