தொழில்நுட்பம்

தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா புதிய சலுகை அறிவிப்பு

Published On 2018-10-03 04:53 GMT   |   Update On 2018-10-03 04:53 GMT
ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. #Idea #Offers



இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் ஐடியா செல்லுலார் மூன்று புதிய சலுகைகளை ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 விலையில் அறிவித்துள்ளது. மூன்று புதிய சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது.

ஐடியா செல்லுலார் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.209 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.



ரூ.479 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.529 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐடியா அறிவித்து இருக்கும் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஐடியாவின் மூன்று புதிய சலுகைகளிலும் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் கால் போன்றே நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தியதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Tags:    

Similar News