தொழில்நுட்பம்

பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்த ஜியோ

Published On 2018-09-19 11:11 GMT   |   Update On 2018-09-19 11:11 GMT
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Jio



இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் மற்ற நிறுவனங்களை விட சுமார் பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 

ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவிகிதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாதத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்கள் அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது, மொபைல் பிராட்பேன்ட் இணைப்புகள் மட்டும் 44.1 கோடியாக இருக்கிறது. 
Tags:    

Similar News