தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்

Published On 2018-08-24 10:53 GMT   |   Update On 2018-08-24 10:53 GMT
ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips


ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.

இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 



செல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்? 

  • ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். 
  • இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும். 
  • இரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.


பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும். 

சில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.

இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம். #techtips
Tags:    

Similar News