சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. #GalaxyNote9
ப்ளிப்கார்ட்டில் கேலக்ஸி நோட் 9 டீசர்
பதிவு: ஜூலை 29, 2018 11:33
கோப்பு படம்
சாம்சங் நிருவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தின் மொபைல் போன் பிரிவில் கேலக்ஸி நோட் 9 அறிமுக தேதி மற்றும் சாம்சங் இதுவரை வெளியிட்டிருக்கும் கேலக்ஸி நோட் 9 டீசர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட, சர்வதேச அறிமுக நிகழ்வை தொடர்ந்து மிகவிரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விற்பனைக்கு இம்முறையும் சாம்சங் ப்ளிப்கார்ட் உடன் கைகோர்த்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேலக்ஸி அன்பேக்டு விழாவுக்கென பிரத்யேக பகுதி ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பிரத்யேக பகுதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.எ.எஸ். மொபைல் செயலிகளில் வழங்கப்படுகிறது.
>
எனினும் இந்த பகுதியில் மொபைலின் விலை மற்றும் விற்பனை சார்ந்த விவரங்கள் இடம்பெறவில்லை. இத்துடன் கேலக்ஸி நோட் 9 வெளியீடு சார்ந்த நோட்டிஃபிகேஷன்களை அறிந்து கொள்ள சைன்-அப் செய்யக்கோரும் ஆப்ஷனும் வழங்கப்ட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என்றும் இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை PLN 4,299 (இந்திய மதிப்பில் ரூ.79,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி வரை கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்களை பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றொரு வெர்ஷனில் எக்சைனோஸ் சிப்செட், 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
512 ஜிபி அளவு இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் பட்சத்தில், பேஸ் வேரியன்ட் இன்டெர்னல் மெமரி 64 ஜிபியில் இருந்து 128 ஜிபியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. #GalaxyNote9 #flipkart