தொழில்நுட்பம்
கோப்பு படம்

ரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை

Published On 2018-06-14 08:16 GMT   |   Update On 2018-06-14 08:16 GMT
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.149 விலையில் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா எஸ்டிவி 149 (FIFA World Cup Special Data STV 149) என அழைக்கப்படுகிறது.

ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.149 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


கோப்பு படம்

புதிய பிஎஸ்என்எல் சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் இன்று (ஜூன் 14) முதல் வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிக டேட்டா வழங்குகிறது. எனினும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை. 

புதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ரீசார்ஜ் அவுட்லெட்களில் கிடைக்கிறது. புதிய சலுகை பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கிறது.
Tags:    

Similar News