தொழில்நுட்பம்

அதிநவீன ஏ.ஐ. அம்சங்களுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்

Published On 2018-04-03 05:25 GMT   |   Update On 2018-04-03 05:25 GMT
எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜி7 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்படவில்லை. எனினும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது. 

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பட்டன் மற்றும் f/1.5 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீயோல் நகரில் அறிமுகம் செய்யப்பட்டு கொரியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிரத்யேக ஏ.ஐ. பட்டன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் என சமீபத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. இவை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்று பிரத்யேக பட்டன் எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படும். 



புதிய ஏ.ஐ. பட்டன் வாடிக்கையாளர்கள் ல்மார்ட்போனின் ஏ.ஐ. அம்சங்களை மிக சுலபமாக பயன்படுத்த வழி செய்யும். கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் எல்ஜி நிறுவனத்தின் கியூ லென்ஸ் மற்றும் கியூ வாய்ஸ் உள்ளிட்ட ஏ.ஐ. சேவைகளை பயன்படுத்த முடியும். ஏ.ஐ. சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனில் அதற்கான சென்சார் மட்டும் பிரத்யேக பட்டன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் எல்ஜி வெளியிட்ட வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அதிகளவு வழங்கப்பட்டு இருந்தது. இதே போன்று கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட பிக்ஸ்பி பட்டன் அனைவராலும் விரும்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எல்ஜி இந்த அம்சத்தை எவ்வாறு வழங்கும் என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக f/1.5 அப்ரேச்சர் கூறப்படுகிறது. இந்த அம்சம் புகைப்படங்களை எடுக்கும் போது அதிகளவு வெளிச்சத்தை கேமராவினுள் அனுப்பும். இந்த அம்சம் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இருக்கும். மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் MLCD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News