தொழில்நுட்பம்

விரைவில் வெளியாகும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2018-03-11 05:11 GMT   |   Update On 2018-03-11 05:11 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ விரைவில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. 

கடந்த ஆண்டு செல்ஃபி  எக்ஸ்பெர்ட் எஃப் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்ட ஒப்போ, இந்த ஆண்டு எஃப் 7 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனின் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஐபோன் X தோற்றத்தை கொண்டிருக்கிறது. ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் புதிய ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனினை தன் முகத்தை மறைக்கும் வகையில் வைத்திருக்கிறார்.

முன்னதாக இதே புகைப்படத்தில் மார்ச் 26 என தேதியுடனும், அதன் பின் தேதி நீக்கப்பட்டு புகைப்படம் மட்டும் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் சீனாவில் வெளியாக இருப்பதாக கூறப்படும் ஒப்போ ஆர்15 போன்றே புதிய ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனும் காட்சியளிக்கிறது. 

ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் ஒப்போ ஆர்15 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் ஒப்போ ஆர்1 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

ஒப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு மற்றும் நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. நாட்ச் ஒருபுறம் ஸ்வைப் செய்தால் செயலிகளையும், மறுபுறம் ஷார்ட்கட்களை இயக்கும் வசதி வழங்கப்படிருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News