தொழில்நுட்பம்

சென்னையில் முதல் சில்லறை விற்பனையகத்தை திறந்த ஜெப்ரானிக்ஸ்

Published On 2019-01-30 06:57 GMT   |   Update On 2019-01-30 06:57 GMT
தொழில்நுட்ப துறையில் புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்வதில் பெயர்பெற்ற ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறந்துள்ளது. #Zebronics



தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது தயாரிப்புகளான தொழில்நுட்ப்ப சாதனங்கள், ஒலி அமைப்பு, மொபைல் மற்றும் கண்காணிப்பு சாதனங்களை தயாரித்து விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியா தனது முதல் சில்லறை விற்பனையகத்தை சென்னையில் உள்ள ஃபோரம் மாலில் திறந்தது.

சில்லறை விற்பனை அணுகுமுறை மூலம் பயனர்களுக்கு அவரவர் விரும்பும் பொருட்களை தொட்டு பார்த்து பொருட்களின் தன்மையை அறிந்துகொண்டு வாங்கச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த பிராண்டின் திருப்தியை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பை தருகிறது. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப சந்தையில் இதுவரை சுமார் 80 விருதுகளை தன்வசம் கொண்டுள்ளது.



தமது புதிய சில்லறை விற்பனையக தொடக்க விழாவில் பேசிய ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் , ராஜேஷ் தோஷி கூறுகையில் - " சென்னையே அனைத்தின் தொடக்கமாகும், இந்த நிறுவனம் தொடக்கம் முதல் ஏறத்தாழ இருபது வருட அனுபவத்திற்கு பிறகு, எங்களின் சொந்த ஊரான சென்னையில் உள்ள "ஃபோரம்  மாலில்" எங்களுடைய முதல் சில்லறை விற்பனையகத்தை துவக்கி வைப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன், புதிய விற்பனையகத்தில் மொபைல் உபகரணங்கள் தொட்டு பார்த்து பயனடையும் வாய்ப்பினை பயனர்களுக்கு வழங்க விரும்புகிறோம். 

இந்த முயற்சி பிராண்டின் நம்பகத்தன்மையை மட்டும் வலுப்படுத்துவது இல்லாமல் மறக்கமுடியா ஒரு அனுபவத்தை தருகிறது.  மேலும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களது நீண்ட கால எங்கள் பிராண்டின் தூண்களாக உள்ள எங்கள் வியாபார கூட்டாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 

இதுபோன்ற அதிக சில்லறை விற்பனையகங்களை "ஜெப்ரோனிக்ஸ்  டிஜிட்டல் ஹப்" என்ற பெயரில் பிரான்சைஸ் திட்டத்தில்  அதிக கடைகளை திறந்து  எங்கள் பிராண்டின் விழிப்புணர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு  திரு. தோஷி  கூறினார்.
Tags:    

Similar News