தொடர்புக்கு: 8754422764

இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் நியமனம்

இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

பதிவு: மே 21, 2019 12:04

உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் - காரணம் இதுதான்

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

பதிவு: மே 21, 2019 10:50

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: மே 21, 2019 09:09

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 07:50

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 21, 2019 01:30

நவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 00:05

மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை ரத்து

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் கய்யூம் சென்ற அதிவேகப் படகை வெடிகுண்டால் தகர்த்து அவரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் 18 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.

பதிவு: மே 20, 2019 21:05

தேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்

ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார்.

பதிவு: மே 20, 2019 17:44

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை

துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பலருக்கு இப்தார் விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

பதிவு: மே 20, 2019 17:12

இம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது - பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை

பாகிஸ்தான் நாட்டின் கடலோர பகுதிகளில் ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெய் இருப்பதாக அகழ்வு பணிக்கு உத்தரவிட்ட பிரதமர் இம்ரான் கானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அங்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 20, 2019 16:20

அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்

அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம் என்ன என்பதை பார்ப்போம்.

பதிவு: மே 20, 2019 15:40

தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் - 32 பேர் பலி

தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 20, 2019 12:16

சண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 10:29

பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு- 11 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். BrazilShooting

பதிவு: மே 20, 2019 09:46

நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன் - இம்ரான்கான் சூளுரை

“நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 06:56

ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு

ஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது.

பதிவு: மே 20, 2019 05:19

ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் - ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்

ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 04:01

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 03:24

ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி

ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியானார்கள்.

பதிவு: மே 20, 2019 00:08

ஆஸ்திரேலியா தேர்தல் - கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

பதிவு: மே 19, 2019 06:40

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்

இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 19, 2019 06:02