செய்திகள்

கனடாவில் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Published On 2019-06-11 18:51 GMT   |   Update On 2019-06-11 18:51 GMT
கனடாவில் மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஒட்டவா:

உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட கனடா மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.



இதுபற்றி பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ‘‘2021-ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன’’ என கூறினார்.
Tags:    

Similar News