செய்திகள்

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி இம்மாத இறுதியில் இந்தியா வருகை

Published On 2019-06-11 13:50 GMT   |   Update On 2019-06-11 13:50 GMT
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான மைக் பாம்பியோ இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் மைக் பாம்பியோ. இவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பொருளாதார ரீதியாக இரு நாடுகளின் உறவும் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான வாய்ப்பாக இந்த பயணத்தைப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாம்பியோவின் இந்திய பயணத்தின்போது, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் பாம்பியோ இந்தியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாம்பியோவின் இந்திய பயணத்துக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News