செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்

Published On 2019-06-10 10:25 GMT   |   Update On 2019-06-11 02:41 GMT
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு மூடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமாபாத்:

புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியது. சர்வதேச சமுதாயமும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அரசு, தனது மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.


கோட்லி, நிகியல் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்கள், பாலா மற்றும் பாக் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள், கோட்லி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் ஒரு முகாம் மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் மிர்பூருக்கு அருகாமையில் உள்ள முகாம்களும் மூடப்பட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் மற்றும் கோட்லி பகுதியில் தலா 5 பயங்கரவாத முகாம்களும், பர்னாலா பகுதியில் ஒரு முகாமும் என மொத்தம் 11 முகாம்கள் இருப்பதாக இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News