செய்திகள்

குண்டுவெடிப்பு விவகாரம்- இலங்கையில் 9 முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா

Published On 2019-06-03 16:05 GMT   |   Update On 2019-06-03 16:05 GMT
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றச்சாட்டு வலுத்துள்ளதால், முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா செய்தனர்.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம்  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சிலரை அங்குள்ள புத்த மதத்தலைவர்கள் குற்றம்சாட்டினர். 



புத்த மதத்தினர் இன்று நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இரு மாகாணங்களை சேர்ந்த முஸ்லிம் கவர்னர்கள் இன்று ராஜினாமா செய்தனர். மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றூம் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.

இதேபோல் இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சில முஸ்லிம் அமைச்சர்கள், தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பதியுதீனை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதனால், அதிகாரிகள் விசாரணை நடத்த ஏதுவாக, 9 முஸ்லிம் அமைச்சர்கள் இன்று பதவிகளை ராஜினாமா செய்தனர். சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசினால் முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Tags:    

Similar News