செய்திகள்

செவ்வாயில் களிமண் கனிமங்களை கண்டறிந்த கியூரியாசிட்டி

Published On 2019-05-31 13:48 GMT   |   Update On 2019-05-31 13:48 GMT
நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் பரப்பில் களிமண் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம், கடந்த மே 12ஆம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டுள்ளது. 

இதை செல்ஃபி படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. அது துளையிட்ட இடங்களில் களிமண் கனிமங்கள் அதிக அளவில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். அந்த வகையில், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கலாம். இதனை உறுதி செய்வதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது.
Tags:    

Similar News