செய்திகள்

ஈராக் விமானப்படை தாக்குதலில் 14 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Published On 2019-05-29 14:25 GMT   |   Update On 2019-05-29 14:25 GMT
ஈராக் நாட்டில் முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய மோசூல் நகரின் அருகே இன்று விமானப்படை நடத்திய தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்றுகுவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இருநாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் தாக்குதல் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் தப்பி ஓடி விட்டனர். மேலும் சிலர் அரசுப் படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். தப்பியோடிய சில பயங்கரவாதிகள் ஈராக்-சிரியா இடையிலான மலையோர எல்லைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்தவாறு அரசுப் படையினர் மீது அவ்வப்போது அதிரடியாக ‘கொரில்லா’ தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியான மோசூல் நகரின் அருகே உள்ள நினேவே மாகாணத்தில் இன்று பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது போர் விமானங்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News