செய்திகள்

பாரிஸின் அழகை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக ரசிக்கலாம் - எப்படி?

Published On 2019-05-29 07:55 GMT   |   Update On 2019-05-29 07:55 GMT
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் அழகினை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் மிக அழகிய நகரங்களுள் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்ற அதிசயமாகும். இந்த டவர் 10 ஆயிரம் டன் எடைக் கொண்டது. மேலும் 324 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த டவர் திறக்கப்பட்டு தொடர்ந்து 41 வருடங்கள் உலகிலேயே மிக உயர்ந்த கோபுரமாக இருந்த பெருமையைக் கொண்டது.

இந்நிலையில் ஈஃபில் டவர் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், இந்த டவரின் மூலம் பாரிஸின் மொத்த அழகை  பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ரசிக்க சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.



ஈஃபில் டவரின் மேல் தளத்தில் இருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ அலுவலகம் வரை கம்பி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் பொருத்தப்பட்டிருக்கும் பெல்ட்டில் அமர்ந்துக் கொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரிஸ் நகரின் அழகை மேலிருந்து பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசமாகும்.



இந்த வழியில் செல்பவர்களுக்கான தேர்வு சமூக வலைத்தளங்களில் நடைபெற உள்ளது என்பதும், வரும் ஜூன் 11ம் தேதி வரை இந்த வசதி தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News