செய்திகள்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி

Published On 2019-05-27 02:20 GMT   |   Update On 2019-05-27 02:20 GMT
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
காத்மண்டு:

நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 

Tags:    

Similar News