செய்திகள்

அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு - ஈரான் அதிபர் யோசனை

Published On 2019-05-26 14:11 GMT   |   Update On 2019-05-26 14:11 GMT
ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

இதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஹயாத்துல்லா கமேனி

இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 'கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.

ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News