செய்திகள்

உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை

Published On 2019-05-25 09:53 GMT   |   Update On 2019-05-25 09:53 GMT
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது. அது என்ன, எதற்கான சிகிச்சை மருந்து என்பது பற்றி பார்ப்போம்.
வாஷிங்டன்:

இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலே மாத்திரை போடும் அளவிற்கு வாழ்க்கை தரமும், வாழும் சூழலும் மாறியுள்ளது.  வேலையில் அதிக பளு, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட பலர் உறங்கும் முன் மாத்திரையோ அல்லது மருந்தோ எடுத்து வருகின்றனர்.

பெரிய சிகிச்சைகளுக்கும் மருந்துகள்தான் மூலப்பொருட்களாக உள்ளன. இப்படிப்பட்ட மருந்துகளின் விலையும் குறைந்தபாடில்லை. சிகிச்சை மற்றும் அதற்கான பயன்பாட்டின் அளவு குறித்து மருந்துகளின் விலை மாறுபடுகிறது.



இந்நிலையில் உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (Food and Drug Administration) நேற்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. மிகவும் அரிதான முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கு பயன்படும் நோவர்ட்டீஸ் மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்தின்  ‘ஒன்செம்னோஜன் சொல்ஜென்ஸ்மா’  விலை உயர்ந்த மருந்து ஆகும்.

இதன் விலை 2.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி). ஒரு முறை இம்மருந்தினை மரபணுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் சுமார் ரூ.14 கோடி செலவாகும்.

இது குறித்து நோவர்ட்டீஸ்  சிஇஓ வாஸ் நரசிம்மன் கூறுகையில், ‘இந்த பொறுப்பினை ஏற்றது முதல் எங்கள் அணுகுமுறையினால் நோயாளிகள் சிறந்த முறையில் குணமடையவே செயல்பட்டு வருகிறோம். இன்னும் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு நோயாளிகள் பயன்பெற உதவுவோம்’ என கூறினார்.

  
Tags:    

Similar News