செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி - ஜெர்மனி வலியுறுத்தல்

Published On 2019-05-21 13:23 GMT   |   Update On 2019-05-21 13:23 GMT
இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நாடுகள் உள்ளன. இந்த 10 தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, அந்த இடத்துக்கு வேறு நாடுகள் தேர்வு செய்யப்படும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருப்பது முற்றிலும் அவசியமான ஒன்றாகும் என பிரான்ஸ் தெரிவித்தது. இப்போதைய நிலையை பிரதிபலிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மற்றும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும் எனவும் இதில் மறு கேள்விக்கே இடம் இல்லை, இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும் எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்தாலும் ஐ.நா. பாதுகாப்பு விரிவாக்கம் என்பது கானல் நீராக தொடர்கிறது.  இப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் கூறியுள்ளார். 

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தரமான உறுப்பினர் பதவியை கொடுக்க வேண்டும். 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்தியா இன்னும் நிரந்தரமான உறுப்பினர் பதவியை பெறவில்லை எனவும் வால்டர் ஜெ லிண்டனர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News