செய்திகள்

இம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது - பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை

Published On 2019-05-20 10:50 GMT   |   Update On 2019-05-20 10:50 GMT
பாகிஸ்தான் நாட்டின் கடலோர பகுதிகளில் ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெய் இருப்பதாக அகழ்வு பணிக்கு உத்தரவிட்ட பிரதமர் இம்ரான் கானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அங்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் சில குறிப்பிட்ட வளங்கள் அண்டை நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. இதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் இம்ரான் குறிப்பிடுகையில், 'கடவுளின் கருணையால் நம் நாட்டில் கிடைக்க இருக்கும் பெட்ரோலிய வளம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இதனால் இந்த வளங்களுக்கு நாம் மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை' என கூறினார்.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் உள்ள கெக்ரால் கடல் பகுதியில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பகுதிகளில் அகழ்வு பணிகள் முடிந்த நிலையில், எவ்வித கனிம வளங்களும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளங்களும் இல்லை எனவும், இந்த வளங்கள் இருப்பதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் இம்ரானின் ஆசையில் மண் விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  

Tags:    

Similar News