செய்திகள்

அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்

Published On 2019-05-20 10:10 GMT   |   Update On 2019-05-20 10:10 GMT
அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம் என்ன என்பதை பார்ப்போம்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார்.

இவர் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அதுவரையில் அங்கு பட்டம் பெற வந்த 400 மாணவர்கள், தங்களுக்காக ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிந்திருக்க மாட்டார்கள்.  மேடையில் உரையாற்றியபோது ஸ்மித் கூறுகையில்,  'இங்கு இருக்கும் 400 பட்டம் பெற்ற மாணவர்களின் கல்வி கடன்களில் மொத்த தொகையை நான் செலுத்துகிறேன்' என கூறினார்.  இதனை அறிவித்த அடுத்த நொடி அரங்கமே அதிர பெற்றோரும், மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.



கல்வி  கடனின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் சுமார் ரூ.278 கோடி) ஆகும். ஏற்கனவே ஸ்மித், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி)  உதவித்தொகையாக அறிவித்தார்.  ஆனால், நேற்று ஸ்மித் வெளியிட்ட இந்த அறிவிப்பு, 400 மாணவர்களுக்கும் சிறந்த யோகம் என்று தான் கூற வேண்டும்.

இது குறித்து கல்லூரியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'இந்த பரிசு கல்லூரி வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த நிகழ்வாகும். இதற்காக தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அவர்களுக்கு எங்கள் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என கூறினார்.  




 





 
Tags:    

Similar News