செய்திகள்

விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டன் நாட்டின் போர் கப்பல் தளபதி சஸ்பெண்ட்

Published On 2019-05-18 10:45 GMT   |   Update On 2019-05-18 10:45 GMT
பிரிட்டன் நாட்டின் ராணி எலிசெபத் போர் கப்பலின் தளபதி, விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசமாக சென்றதால் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லண்டன்:

பிரிட்டன் நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு ராணி எலிசெபத்  போர் கப்பல் ஒன்று நிறுவப்பட்டது. இந்த போர் கப்பல் 40 விமானங்களை தாங்கக் கூடியதாகும். இந்த போர் கப்பலின் தளபதி நிக் கூக் பிரிஸ்ட்(50) ஆவார். 1990ம் ஆண்டு முதல் கடற்படையில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது விடுமுறை நாட்களில் அரசுக்கு சொந்தமான வாகனங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்து வந்துள்ளார்.  இதையறிந்த கடற்படை தலைமை அதிகாரிகள், அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி நிக்கினை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இது குறித்து ராயல் கடற்படையின் அதிகாரி கூறுகையில், ‘கடற்படை நிர்வாகம் எடுத்த இந்த முடிவு குறித்து நாங்கள் கமெண்ட் சொல்ல முடியாது. நிக், வேறு புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்’ என கூறினார்.  
Tags:    

Similar News