செய்திகள்

இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் மனைவி குழந்தை பெற்றார்

Published On 2019-05-16 05:43 GMT   |   Update On 2019-05-16 05:55 GMT
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்ட முவாத் என்பவரின் மனைவிக்கு மே 5ம் தேதி அன்று முதல் குழந்தை பிறந்துள்ளது.
கொழும்பு:

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300க்கும் பேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர். 



தாக்குதல் நடத்திய 9 பேரில் அலாவுதீன் அகமது முவாத்(22)  ஒருவர். இவர் தலைநகர் கொழும்புவின் செயின்ட் அந்தோணி தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இவர் சட்ட கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட 9 பேர் மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முவாத்தின் தந்தை அகமது லபே அலாவுதீனிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில்,  ‘சட்ட மேற்படிப்பிற்காக இலங்கை வந்தான். 14 மாதங்களுக்கு முன்பு அவனுக்கு திருமணம் ஆனது. கடந்த மே 5ம் தேதி அவனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக ஏப்ரல் 14ம் தேதி தான் அவனை பார்த்தேன்’ என தெரிவித்தார்.

இதற்கிடையில் முவாத் எழுதிய கடிதத்தில், ‘என்னை யாரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் முவாத் இறந்த பின்னரே குடும்பத்தாருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News