செய்திகள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினரை கண்காணிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவு

Published On 2019-05-05 15:15 GMT   |   Update On 2019-05-05 15:15 GMT
மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. #bannedgroups #Pakistanbannedgroups
இஸ்லாமாபாத்:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சர்வதேச பயங்கரவாதியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதுதவிர, ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட சில பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில தலைவர்களுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. 

ரமலான் நோன்பு மாதத்தில் செல்வந்தர்களிடம் இருந்து ஏராளமான நன்கொடைகளை பெறும் இந்த பயங்கரவாத அமைப்புகள் அவற்றை உள்நாடு மற்றும் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவிப்பதற்காக செலவிட்டு வருகின்றன.

இந்நிலையில், மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாகாண அரசுகளுக்கு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. #bannedgroups #Pakistanbannedgroups 
Tags:    

Similar News