செய்திகள்

மாலத்தீவு அதிபர் முகம்மது சோலியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Published On 2019-03-18 11:25 GMT   |   Update On 2019-03-18 11:25 GMT
இருநாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் முகம்மது சோலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Maldives #IbrahimMohamedSolih
மாலே:

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இருநாள் பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, மாலத்தீவின் உள்துறை மந்திரி இம்ரான் அப்துல்லாவை சந்தித்தார்.



மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகம்மது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #Maldives #IbrahimMohamedSolih
Tags:    

Similar News