செய்திகள்

சிரியா - பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி

Published On 2019-01-16 15:35 GMT   |   Update On 2019-01-16 15:50 GMT
வடகிழக்கு சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #Syria
டமாஸ்கஸ்:

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியா நாட்டின் வடபகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தின் மன்பிஜ் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் வசித்து வரும் பகுதி மன்பிஜ் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria
Tags:    

Similar News