செய்திகள்

ஈரானில் கடும் நிலநடுக்கம்- 75 பேர் காயம்

Published On 2019-01-08 04:48 GMT   |   Update On 2019-01-08 04:48 GMT
ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. #Iranearthquake
தெக்ரான்:

ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரோடுகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.

5.9 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  #IranEarthquake
Tags:    

Similar News