செய்திகள்

பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது - இம்ரான் கான்

Published On 2018-12-07 14:12 GMT   |   Update On 2018-12-07 14:12 GMT
பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். #ImranKhan #bjp
இஸ்லாமாபாத்:

பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. 

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இம்ரான் கான், இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். 

மும்பை தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள இம்ரான் கான், “இவ்வழக்கின் நிலையை ஆய்வு செய்ய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். பயங்கரவாதம் தொடர்பானது, இவ்வழக்கை தீர்ப்பதில் நாங்கள் நாட்டம் கொண்டுள்ளோம்,” என குறிப்பிட்டுள்ளார்.  #ImranKhan #bjp
Tags:    

Similar News