செய்திகள்

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி - உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை

Published On 2018-11-12 09:49 GMT   |   Update On 2018-11-12 09:49 GMT
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா மந்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut
அபுதாபி:

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி இன்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.


அபுதாபியில் இன்று நடைபெற்ற எரிபொருள் கருத்தரங்கில் பேசிய காலித் அல் ஃபலி, ‘சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம்’ என குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவும் அடுத்த மாதத்துக்குள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut
Tags:    

Similar News